சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகள் : விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்

Dec 05, 2019 04:36 PM 325

சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க, சென்னையில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமர்வு நீதிமன்ற கட்டடத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க தமிழகத்தில், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் முதல்கட்டமாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted