குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பரப்பியவர்கள் பட்டியல், குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

Dec 19, 2019 06:51 PM 517

குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களைப் பரப்பியவர்களின் பட்டியல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில்தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளதாகவும், குற்றமே இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் என்பதே காவல்துறையின் நோக்கம் என்றும் கூறினார்.

Comment

Successfully posted