அதிபர் தேர்தலில் ரஷ்யாவை விட சீனா பிரச்சினையை ஏற்படுத்தியது - டோனல்ட் டிரம்ப்

Oct 15, 2018 02:38 PM 1058

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவைப் போல சீனாவும் தலையிட்டதாக, அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு நிலவியது. இந்த நிலையில், ரஷ்யாவைப் போன்று சீனாவும் தேர்தலில் தலையிட்டதாக அதிபர் டிரம்ப் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிபர் தேர்தலில் தலையிட்டதில், ரஷ்யாவை விட சீனா பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார். ரஷ்யாவின் தலையீடு பிரச்சனையை திசை திருப்ப தான் முயற்சிக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

Comment

Successfully posted