சீனாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Sep 20, 2021 07:03 AM 6032

சீனாவில் பயணிகள் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு சீனாவின் குய்ஜோ மாகாணத்தில், 46 பயணிகளுடன், படகு ஒன்று புறப்பட்டது. இதில் சீனாவின் வருடாந்திர மத்திய இலையுதிர் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் பலரும் குடும்பத்தினருடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் படகு, கிளம்பிய சிறிது நேரத்தில் வேகமாக வீசிய காற்று காரணமாக கவிழ்ந்துள்ளது. இதையடுத்து மீட்புப் படையினர், படகில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 10பேர் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 31 பேர் மீட்கப்பட்ட நிலையில் மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. படகிலிருந்தவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில், விபத்துகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

Comment

Successfully posted