உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்!

Feb 12, 2021 04:10 PM 4515

சீன புத்தாண்டு பிறப்பையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சீனாவில் இந்த ஆண்டு எருது ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சீனா முழுவதும் உள்ள முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. அந்த நாட்டின் பல்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் வண்ண வண்ண கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சீன மக்கள், புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்று மகிழ்ந்தனர். புத்தாண்டு கலைநிகழ்ச்சிகள் 600 ஊடகங்கள் வழியாக 170 நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. ஆடல், பாடல் என உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.

 

Comment

Successfully posted