சின்னத்தம்பி யானை விவகாரம்: தமிழக அரசு சார்பில் பதில் அறிக்கை தாக்கல்

Feb 11, 2019 11:55 AM 52

சின்னத்தம்பி யானையை முகாமில் அடைக்க கோரிய வழக்கில் பதில் அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்கிறது.

கோவை மாவட்டத்தில் மனித உயிர்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வரும், சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்க வேண்டுமென முரளி கிருஷ்ணன் என்ற சமூக ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி நீதிபதி மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து சின்னத்தம்பி யானை குறித்த பதில் அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.

Comment

Successfully posted