கோவையில் பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Feb 21, 2020 09:15 AM 247

கோவையில் சிந்தாமணி கூட்டுறவு பண்டகசாலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் நிலையத்தை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சிந்தாமணி கூட்டுறவு பண்டகசாலை சார்பில் பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்தார்.

பின்னர்  ஸ்கூட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் போட்டு விற்பனையை அமைச்சர் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், அருண்குமார்,  சின்னராஜ் மற்றும் மண்டல இணைப் பதிவாளர் பழனிச்சாமி, சிந்தாமணி மேலாண்மை இயக்குனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted