மதுரையில் சித்திரைத் திருவிழா: மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் இன்று தொடங்கியது

Apr 18, 2019 07:27 AM 134

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் 11-ம் நாள் விழாவான இன்று மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் தொடங்கியது.

மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோர் கூடும் நிகழ்வான எதிர்சேவை நாளை நடைபெறவுள்ள நிலையில், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted