கங்கை கொண்ட சோழபுரத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா

Feb 21, 2020 09:03 AM 289

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் நடனப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இந்த விழாவில் பெங்களூர், சென்னை, கோவை, கடலூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டிய மாணவிகள் கலந்து கொண்டு பக்திப் பெருக்குடன் நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Comment

Successfully posted