கொரோனா அச்சுறுத்தல்: நியூசி. மசூதி தாக்குதலின் முதலாமாண்டு அனுசரிப்பு நிகழ்வு ரத்து

Mar 14, 2020 02:01 PM 299

 

நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் பகுதியில் உள்ள மசூதி மற்றும் இஸ்லாமிய மையத்தில் கடந்தாண்டு மார்ச் 15 ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 51 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு அனுசரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நினைவேந்தல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவுதி அரேபியாவில் சர்வதேச விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. நாளை முதல் 2 வாரங்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தை ரத்து செய்ய சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.

Comment

Successfully posted