பல்லடத்தில் சினிமா பாணியில் கார் சேசிங்...

Aug 27, 2021 12:48 PM 1028

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சினிமா பாணியில் காரைத் துரத்தி ஓட்டுநரை கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

அம்மாபாளையத்தைச் சேர்ந்த பாக்கியா தனது பேத்தி பிரஜன்னாவுடன், தங்களுக்கு சொந்தமான சாண்ட்ரோ காரில் தாராபுரத்தில் உள்ள உறவினரைப் பார்க்க சென்றுள்ளனர். காரை, ஆக்டிங் டிரைவர் சக்தி என்பவர் இயக்கியுள்ளார்.

பின்னர் வீடு திரும்புகையில் பல்லடம் அருகே கார் வந்தபோது, ஆடி, ஸ்விப்ட், சைலோ ஆகிய மூன்று சொகுசு கார்களில் துரத்தி வந்த மர்ம நபர்கள் இவர்களின் காரை மடக்கி நிறுத்தியதோடு, டிரைவர் சக்தியை தாக்கி கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவலில் விரைந்து வந்த பல்லடம் போலீசார், பாக்கியாவையும் பேத்தியையும் காருடன் மீட்டு காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே மர்ம நபர் வந்த சைலோ கார் பழனி அருகே நிற்பதாகக் கிடைத்த தகவலில் காரை கைப்பற்ற போலீசார் விரைந்துள்ளனர்.

Comment

Successfully posted