பனியில் விளையாடிய சர்க்கஸ் யானைகள்

Jan 30, 2020 09:43 PM 598

ரஷ்யாவில் சர்க்கஸ் யானைகள் சாலைக்கு வந்து, பனியில் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.  

ரஷ்யாவில் உள்ள ‘இத்தாலியன் சர்க்கஸ்’ நிறுவனமானது பல்வேறு இடங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவின் யாக்டெரின்பர்க் நகரில் இந்நிறுவனம் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்திய பின்னர், அடுத்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக கார்லா, ரன்னி ஆகிய 2 யானைகளை  லாரிகளில் ஏற்ற முயன்றனர். ஆனால், அந்த 2 யானைகளும் லாரிகளில் ஏற மறுத்தன.
 
அப்போது கார்லா என்ற பெண் யானை, கட்டுப்பாடுகளை மீறி சாலைக்குச் சென்றது. அங்கு அது ஒரு குழந்தையைப் போல காலை மடக்கி  பனியில் அமர்ந்தும், பனியில் உருண்டும் அது விளையாடியது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில நிமிடங்களில் சர்க்கஸ் ஊழியர்கள் அந்த யானைகளை மீண்டும் லாரிகளில் ஏற்றினர்.
 
வீட்டில் அடம்பிடித்து சாலைக்கு வந்து விளையாடும் குழந்தைகளைப் போல, சர்க்கஸ் யானைகளும் சாலைக்கு வந்து விளையாடிய இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Comment

Successfully posted