விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் குடிமராமத்துப்பணி

Aug 13, 2019 06:26 PM 61

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 77 ஊரணிகளுக்கான குடிமராமத்து பணியை வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

உசிலம்பட்டி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊரணியில், குடிமராமத்து பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி தொடங்கி வைத்தனர். உசிலம்பட்டியை சுற்றியுள்ள சுமார் 77 ஊரணிகளை தூர்வாரி பராமரிக்கும் விதமாக, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு பெரும் உதவிகரமாக இந்த திட்டம் அமையும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். நீலகிரியில் நிவாரண பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

Comment

Successfully posted