குன்னூர் அருகே சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்

Feb 12, 2019 10:52 AM 163

நீலகிரி மாவட்டம் குன்னூர் சமவெளி பகுதிகளில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குன்னூர் மலை ரயில் பாதை மற்றும் மலை பாதைகளில் படையெடுக்கத் துவங்கியுள்ளன.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் உலா வரும் ஒற்றை காட்டுயானை, அருகே உள்ள கிராமங்களான வடுகன் தோட்டம், கோழிக்கரை ஆகிய பகுதிகளுக்கும் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment

Successfully posted