அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் மதுரை கிளை

Oct 13, 2018 07:35 AM 234

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கு எவ்வித ஆதாரமும் சமர்பிக்கவில்லை என்று கூறி, அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா தனது தாய் என்று கூறிய அம்ருதா, மரபணு பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கு இதுவரை எந்த சாட்சியத்தையும் அம்ருதா சமர்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அம்ருதா ஜெயலலிதாவுடன் இருப்பதற்கான புகைப்படம் கூட இதுவரை அளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதி, அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Comment

Successfully posted