கிளியோபட்ரா கதாபாத்திரம் - Wonder Woman கதாநாயகிக்கு எதிர்ப்பு

Oct 14, 2020 10:09 PM 919

கிளியோபட்ரா கதாபாத்திரத்தில் கேல் கேடாட் (Gal Gadot ) நடிப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வொண்டர் வுமென் நடிகையான கேல் கேடாட், அடுத்ததாக பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins) இயக்கத்தில் எகிப்திய ராணி கிளியோபட்ராவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதும், ஒரு கிரேக்க நாட்டு ராணியின் கதாபாத்திரத்தில் அரேபிய அல்லது ஆப்ரிக்க நடிகை நடிப்பதுதான் சரியாக இருக்கும் எனவும், இஸ்ரேலிய வெள்ளை நடிகை நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், எகிப்திய வரலாற்றை ஒயிட் வாஷ் செய்யாதீர்கள் எனவும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

Comment

Successfully posted