நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.123 கோடி செலவு குறைப்பு: அமைச்சர் தங்கமணி

Sep 18, 2019 12:48 PM 228

விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டு வருவதால், ஆண்டிற்கு சுமார் 123 கோடி ரூபாய் வரையில் செலவு குறைக்கப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்...

சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், , மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டார். இதில் அனல் மின் நிலையங்களில் உலர் மற்றும் ஈர சாம்பலை 100 சதவீதம் முற்றிலும் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் விசாகப்பட்டினம் துறைமுக வழியாக நிலக்கரி கொண்டு வருவதற்கு, துறைமுக கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு நிலக்கரி வர துவங்கி உள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 123 கோடி ரூபாய் வரையில் செலவு குறைக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் டன் நிலக்கரி வாங்குவதற்கு மின்னனு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.மேலும் வட சென்னை அனல் மின் திட்டம், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் , உப்பூர் அனல் மின் திட்டம் , உடன்குடி அனல் மின் திட்டம் , எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திட்டம், குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் , கொல்லிமலை நீர் மின்திட்டம் ஆகிய மின் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Comment

Successfully posted