திண்டுக்கல் அருகே நடைபெற்ற சேவல் கண்காட்சி

Feb 03, 2019 10:02 PM 172

திண்டுக்கல் அருகே நடைபெற்ற சேவல் கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. திண்டுக்கல் மாவட்டம் சித்தூர்பட்டியில், சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சேவல்கள், கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் விசிறி வால் சேவல், பார்வையாளர்களால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை விலை கேட்கப்பட்டது.

குறிப்பாக வெள்ளை, மயில், கருப்பு, வெள்ளை நூலான், விசிறிவால், கிளி மூக்கு என பல்வேறு வகையான சேவல்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த சேவல் கண்காட்சியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். சேவல் கண்காட்சியில் கலந்துகொண்ட சேவல்களின் உடலமைப்பு, திறனைப்பொறுத்து அவற்றிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Comment

Successfully posted