சேவல்கட்டு போட்டிக்கு தயாராகும் சேவல்கள் !

Feb 11, 2019 02:41 PM 53

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பூலாம்வலசில் நடைபெறும் சேவல்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு சேவல் பிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பூலாம் வலசு கிராமத்தில், சேவல் கட்டு நிகழ்ச்சி புகழ் பெற்றது. இந்தநிலையில், இங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடும் போது, பாரம்பரிய விளையாட்டான சேவல்கட்டு போட்டி நடைபெறவில்லை. எனவே இப்பகுதி பொதுமக்கள் நீதிமன்றத்தை அணுகி சேவல் கட்டுப்போட்டி நடத்த முறையாக அனுமதி வாங்கியுள்ளனர். அதன்படி வரும் 16 ,17 ,18 ஆகிய தேதிகளில் சேவல்கட்டு போட்டி நடைபெறுகிறது. மேலும் இப்பகுதியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சேவல்கட்டு பிரியர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்காக தங்களது சேவல்களை சிறப்பாக தயார்படுத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted