இளைஞரின் காதுக்குள் குடும்பத்துடன் குடியேறிய கரப்பான் பூச்சி

Feb 17, 2019 06:33 PM 1319

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள டான்குவான் நகரை சார்ந்தவர் யாங் சிங் லீ. இந்த இளைஞரின் வயது 19. திடீரென ஒருநாள் இரவில் இவரின் காதில் பெரும் வலி ஏற்பட்டது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் வலியுடன் நடந்துக்கொண்டே இருந்தார். மறுநாள் பொழுதும் விடிந்தது.

விடிந்ததுதான் தாமதம்.... காதில் வலியை தாங்கிக் கொள்ள பஞ்சை வைத்துக்கொண்டு நேராக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் லீ. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்தே விட்டனர்.காரணம் அவரின் காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சி தனது 25 குட்டிகளுடன் குடியேறியது தெரிய வந்துள்ளது.

இதனை கேட்டதும் யாங் சிங் லீக்கு மயக்கமே வந்துவிட்டது. எப்படி தன் காதுக்குள் கரப்பான் பூச்சி போனது என அவருக்கே தெரியவில்லை. பொதுவாகவே கரப்பான் பூச்சி ஒரு சமயத்தில் அதிகப்பட்சமாக 40 குஞ்சுகள் வரை முட்டையிடும். கரப்பான் பூச்சியின் குடும்பத்தால் லீயின் காது முற்றிலும் அடைபட்டிருந்தது.நவீன சிகிச்சையின் மூலம் காதுக்கு எத்தகைய பாதிப்பு இல்லாமல் கரப்பான் பூச்சியையும் அவற்றின் குட்டிகளையும் சாமர்த்தியமாக வெளியே எடுத்தார் மருத்துவர் யங் ஜிங். கொஞ்சம் விட்டால் யாங் சிங் லீக்கு காது கேட்காமலேயே போயிருக்கும்.

யாங் சிங் லீக்கு மட்டுமல்ல இந்த செய்தி நம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு தரும் எச்சரிக்கை நிகழ்வாகும்.

Comment

Successfully posted