உயிரிழப்பால் ஊழியர்களுடன் கைகலப்பு- 6 சாமியின் 7 உறவினர்கள் மீது வழக்கு பதிவு-CCTV உள்ளே!!

Jun 25, 2021 04:41 PM 757

கோவையில், கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உறவினர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையேயான வாக்குவாதம், கைகலப்பில் முடிந்தது.

image

கொரோனா தொற்றால் பாதிக்ககப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த ஆறுசாமி, கோவை சுந்திராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மே மாதம் 29ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை அடுத்து, உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், தற்போது மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய மருத்துவ அறிக்கையில், சந்தேகம் இருப்பதாகக் கூறி, உயிரிழந்த ஆறுசாமியின் உறவினர்கள் 7 பேர், மருத்துவரிடம் சந்தேகங்களை கேட்டனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, மருத்துவரின் செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்தும், மருத்துவரை கீழே தள்ளிவிட்டும், வெளியே தப்பியோடினர். இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், ஏழு பேரையும் துரத்திப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த காட்சிகள், மருத்துவமனையின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி, தற்போது வெளியாகியுள்ளது.

imageஇதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், ஆறுசாமியின் உறவினர்கள் 7 பேர் மீது, போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted