திருச்சி அருகே இரட்டைக் கொலை செய்த கல்லூரி மாணவர்கள் கைது

Feb 25, 2020 08:58 PM 592

திருச்சி அருகே, லோடு ஆட்டோ ஓட்டுநரையும் அவரது மனைவியையும் வெட்டிக் கொன்ற இரண்டு கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த பெரகம்பி கிராமத்தை சேர்ந்த ரமேஷ், சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், இவரையும் இவரது மனைவியையும், இரும்புக் கம்பியால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் சிலர் படுகொலை செய்தனர். வீட்டில் இருந்த நகைகள், பணம் மற்றும் புதிய இருசக்கர வாகனம் ஆகியவையும் திருடுபோயின. இந்த இரட்டை கொலை, திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக, வாழையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி, பெரம்பலூர் மாவட்டம் சத்திரமணி பகுதியை சேர்ந்த கிசாந்த் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்களை சிறுகனூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

College students arrested for double murder near Trichyஅவர்களிடம் நடத்திய விசாரணையில், 'ரமேஷ் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்தின் மீது ஆசைப்பட்டு இருவரும் திருட சென்றதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரையும் அடித்து கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். கொலையாளிகளை பிடித்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
 

Comment

Successfully posted