தீபாவளியை முன்னிட்டு சென்னையில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள்

Oct 31, 2018 09:42 AM 392

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 15 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகளுடன் தீபாவளியைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மெட்ரோ ரயில்களில் தீபாவளி வாழ்த்து வாசகங்கள், தீபம், பட்டாசு என வண்ணமயமான போஸ்டர்களால் அலங்கரிக்கப்பட்ட 15 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயிலின் முன்பகுதி, உட்பகுதியில் "தீபாவளி வாழ்த்துக்கள்" ரங்கோலி கோலம், தீப விளக்கு, பட்டாசு, வாழ்த்து செய்திகள் என்று வண்ணமயமாக மெட்ரோ ரயில் முழுவதையும் அலங்கரித்துள்ளனர். இந்த மெட்ரோ ரயில்கள் செவ்வாய் கிழமை முதல் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை, டிஎம்எஸ் - விமான நிலையம் செல்லும் 15 மெட்ரோ ரயில்களும் அலங்கரிக்கப்பட்ட தீபாவளி வாழ்த்து போஸ்டர்களால் காட்சி தருகின்றன. இது மெட்ரோ ரயில் பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகிறது.

தீபாவளிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், ரயில் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted