வேலூரில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள பொருட்காட்சி துவக்கம்

Dec 15, 2019 06:41 AM 234

வேலூரில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு துறைகளின் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பிலான பல்வேறு துறைகளின் கண்காட்சியை, வேலூரில் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார். விழாவில் 3 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர், தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், 10 இடங்களில் பொருட்காட்சி நடத்தப்படுவதாகக் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted