மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு

Dec 13, 2019 06:41 PM 697

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே உயர்வு கண்டது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகநேர முடிவில், 428 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 10 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தையான நிப்டி 115 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 87 ஆக இருந்தது. ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, இந்துஸ்தான் அலுமினியம் கம்பெனி, ஸ்டேட் பாங்க், மாருதி சுசுக் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு 3 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதே பங்குச்சந்தை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

Comment

Successfully posted