கணினியின் உடன் பிறப்பான விசைப்பலகை எழுத்துக்கள் கலைய காரணம் தெரியுமா?

Sep 11, 2019 08:10 AM 160

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் நவீனங்களும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் கணினி யுகத்தில் வன்பொருளாக வலம் வந்துக்கொண்டிருக்கும் விசைப்பலகை. நாம் அனைவரும் முதன்முதலாக விசைப்பலகையை பயன்படுத்திய போது, ஏன் எழுத்துக்கள் எல்லாம் இப்படி கலைந்து கிடக்கின்றன, அகர வரிசைப்படி இருந்திருந்தால் சுலபமாக இருந்திருக்குமே, என்று சிந்தித்து இருப்போம்.,

ஆனால், அப்படியில்லாமல் இருப்பதற்கான காரணம். விசைப்பலகையானது நமக்கு நேரடியாக கணினி பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டதல்ல, தட்டச்சினை தழுவியே பிறந்தது. நாம் நினைத்தது போல் அந்த தட்டச்சிலும் அகரவரிசைப்படியே முதலில் எழுத்துக்கள் இடம்பிடித்திருந்தன. அப்போது LAB, STAND, TABLE போன்ற அகர வரிசைப்படி வரும் எழுத்துகளை உபயோகிக்கும் பொழுது, பயன்பாட்டில் அதிகம் உள்ள வார்தைகள் தட்டச்சின் அருகருகில் இடம்பெற்றிருந்ததால் வேகமாக டைப் செய்யும் போது தட்டச்சு கம்பிகள் சிக்கிக்கொண்டன.

இதற்கு தீர்வு காணும் விதமாக அமெரிக்காவின் ஒரு பத்திரிக்கை நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த christopher lathem sholes என்பவர், 1867ஆம் ஆண்டு முதல், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். இறுதியாக QWERTY விசைப்பலகை வடிவமைப்பை தொகுத்து REMINGTON என்ற விசைப்பலகை தயாரிக்கும் நிறுவனத்திடம் விற்றார். அந்நிறுவனத்தினர் ஷிஃப்ட் கீ ((shift key )) உள்ளிட்ட ஒரு சில மாறுதல்களை செய்து 1878 ல் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தட்டச்சினை தழுவியே விசைப்பலகை பிறந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக அதன் முதல் வரிசையிலேயே TYPE WRITER என்கிற வார்த்தை உள்ளடங்கும் படி வடிவமைத்தனர்.

இன்று உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவீத்திற்கு மேல் சுலபமாக இணையத்தை பயன்படுத்துகிறோம் என்றால், அந்த பெருமை, நமக்கு இந்த QWERTY விசைப்பலகை வடிவமைப்பை தந்த christopher-ஐ யே சேரும்.

ஆனால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் அது மட்டும் அல்ல. அமெரிக்காவை சேர்ந்த கல்வி உளவியலாளரும் பேராசிரியரான ஆகஸ்ட் துவாரக் என்பவர் 1936 ம் ஆண்டு qwerty விசைப்பலகைக்கு மாற்றாக துவாரக் விசைப்பலகையை கண்டுபிடித்தார். அதில் தட்டச்சின் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக தேவையற்ற விரல் அசைவு மற்றும் இயக்கங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு ஆய்வுகள் மேற்க்கொண்டு பிரத்யேகமான விசைப்பலகையை வடிவமைத்தார். ஆனால் நாம் அனைவரும், பழக்கப்பட்ட qwerty விசைப்பலகையில் இருந்து விடுபட்டு, நேரத்தை மிட்சப்படுத்தக்கூடிய துவாரக் விசைப்பலகைக்கு மாறுவதை தேவையற்ற வேலையென எண்ணி புறக்கணித்து விடுகிறோம்.

Comment

Successfully posted