ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து பண்ட் விலகல்

Jan 16, 2020 10:37 AM 1687

காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அப்போட்டியில், பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் அப்போட்டியில் ரிஷப் பண்ட் பீல்டிங் செய்ய வரவில்லை.

இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பண்ட்டின் மூளை அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார். மேலும், அவருக்கு அதிக ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 17ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் 2வது ஒருநாள் போட்டியில் பண்ட் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted