பேக்கரி கடை மீதான தாக்குதலுக்கு கண்டனம்

Sep 15, 2021 06:26 PM 1141

தஞ்சாவூரில், பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிவிட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகர்களுக்கு உரிய தண்டனை பெற்றுதர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், தஞ்சாவூர் சூரக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் பேக்கரி கடைக்கு மன்னார்குடி நகர திமுக இளைஞர் அணிச் செயலாளர் சுதாகர் தலைமையில் சென்று திமுகவினர் தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடையில் இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பேசி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. துயர சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் படுகாயமடைந்ததாக கூறியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர், வழக்கில் தொடர்புடைய திமுகவை சேர்ந்த 8 பேரையும் சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Comment

Successfully posted