இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் பறிமுதல்

Feb 17, 2020 08:11 AM 316

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு  கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், கடத்தல் தொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.

உச்சிப்புளி ஐஎன்எஸ் விமானப்படை முகாமில் இருந்து கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து சென்ற போது இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் இந்திய எல்லைக்குள் பிடிப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கம் கடத்தி வந்து தங்கச்சிமடம் மீனவர்களிடம் கொடுக்கவந்ததாக தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த தியோனி,  தனுஷியஸ்,  ராமேஸ்வரத்தை சேர்ந்த லட்சுமணன், சர்வேஸ்வரன் ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இலங்கை மீனவர்களின் படகின் பின்புறத்தை உடைத்து பார்த்தபோது அதில் 1 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

Comment

Successfully posted