தாளவாடி பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Jul 20, 2019 05:35 PM 55

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில், அதிகாரிகளின் சோதனையில், தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களும் அரசின் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளித்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள அனைத்து கடைகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Comment

Successfully posted