காங். வேட்பாளர் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்!

Apr 11, 2021 09:38 PM 3225

 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்தது. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று காரணாமாக உயிரிழந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றார். மாற்று கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது எனவும் சத்யபிரதா சாகு விளக்கம் அளித்தார்.

Comment

Successfully posted