டெல்லி தமிழ் சங்கம் சார்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

Jul 18, 2019 12:20 PM 71

டெல்லி தமிழ் சங்கம் சார்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

ஆர்.கே. புரத்தில் உள்ள தமிழ்ச்சங்க வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவில், அ.தி.மு.க.சார்பில் நவநீதகிருஷ்ணன், ரவீந்திரநாத் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாக்கூர், ஹெச்.வசந்தகுமார், ஜெயக்குமார், செல்லக்குமார், விஷ்ணூபிரசாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், பாண்டிச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திராநாத் குமார், கூடியிருக்கும் அனைவரும் வெவ்வேறு கட்சியினராக இருந்தாலும், அனைவரும் தமிழக எம்.பிக்கள் என தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், இது போன்ற விழா எம்.பிக்களுக்கு கூடுதல் பணிகளை செய்ய ஊக்கம் அளிக்கும் எனவும் கூறினார்.

Comment

Successfully posted