விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் வாழ்த்து!

Aug 21, 2020 06:20 PM 865

விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான் அவதரித்த தினத்தில், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்நாளில், முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானுக்கு, மக்கள் தங்கள் இல்லங்களில் சிலைகள் வைத்து வழிபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். விநாயகரின் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மக்கள் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted