தேனி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் துணை முதல்வரிடம் வாழ்த்து

Jan 12, 2020 11:14 AM 4479

தேனி மாவட்டம் ஊரக, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில்  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பிரித்தா, பாஜகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் உட்பட தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வெற்றியாளர்கள், பெரியகுளத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரையும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சால்வை அணிவித்து பாராட்டினார்.

Comment

Successfully posted