திமுக - காங்கிரஸ் இடையே நேற்றிரவு நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை!

Mar 07, 2021 07:14 AM 1904

 

திமுக - காங்கிரஸ் இடையே நேற்றிரவு நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படாததால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில், முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி பங்கீடு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அதே சமயம், திமுக கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில், ஒரு வாரத்திற்கும் மேலாகவே இழுபறி நீடித்து வருகிறது.

தேசிய கட்சியான காங்கிரஸின் தமிழக தலைவரை கண்கலங்க வைக்கும் அளவிற்கு, திமுக நிர்வாகிகளின் போக்கு வரம்பு மீறியது.

இதனால், விரக்தியில் உள்ள காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என கட்சித் தலைமையை வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படாததால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

 

Comment

Successfully posted