திமுக மீது காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி

Apr 01, 2019 06:40 AM 170

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்கள் அதிருப்தி அய்டைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கூட்டத்தை புறக்கணித்து விட்டு பலர் எழுந்து சென்றதால் பெரும்பாலான நாற்காலிகள் காலியாகவே காணப்பட்டன. அதிருப்தியில் டீ அருந்திய பிளாஸ்டிக் கப்புகள், காலி தண்ணீர் பாட்டில்களையு குப்பைபோல் போட்டுவிட்டு சென்றனர்.

Comment

Successfully posted