பீகாரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க கோரி முதல்வர் வீட்டின் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

Dec 22, 2018 04:07 PM 280

பீகாரில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றம்சாட்டி முதலமைச்சர் நிதீஷ்குமார் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நிதீஷ்குமார் அமைத்திருந்த ஆட்சி, கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக பிளவுபட்டு ஆட்சி கலைக்கப்பட்டது. இதையடுத்து பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார், முதலமைச்சர் நிதீஷ்குமார் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.

Comment

Successfully posted