மாநில தலைவர் முன்னிலையில் கைக்கலப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

Dec 10, 2019 03:10 PM 191

திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி முன்பே, அந்த கட்சியினர் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், திண்டுக்கல்லில் மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் அப்துல்கனிராஜா வரவேற்பின் போது தனது பெயரைக் கூறவில்லை எனக் கூறி சித்தரேவு பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இருவரின் ஆதரவாளர்களும், கே.எஸ்.அழகிரி முன்பே கைகலப்பில் ஈடுபட்டனர். கட்சியினர் மோதிக் கொண்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் கே.எஸ்.அழகிரி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியினர் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comment

Successfully posted