ஒரே இடத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Dec 06, 2020 11:29 AM 893

தெலங்கானா மாநிலத்தில், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உதவிக் கொண்டிருந்தவர்கள் மீது, சரக்கு லாரி மோதி ஏற்படுத்திய விபத்தின் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சித்திபேட்டை புறநகர் சாலையில் சென்ற கார் ஒன்று, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சித்திபேட்டை காவல்துறையினர், சம்பவ இடத்தில் பொதுமக்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அவ்வழியே வந்த சரக்கு லாரி ஒன்று, அந்த கூட்டத்தின் மீது வேகமாக மோதியது. இதில் லாரியின் அடியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.  காவல் ஆய்வாளர், கான்ஸ்டபிள் உட்பட காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துகள் குறித்து காவல்துறை விசாரித்து வரும் நிலையில், சரக்கு லாரி மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted