அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது

Dec 05, 2021 03:16 PM 2278

அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் போட்டியிட எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் நாளை தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் வருகிற வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தேர்தல் ஆணையர்களான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் ஆணையர்கள் தலைமையில், எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் பெறப்பட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted