முதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி!

Jan 10, 2021 07:00 AM 6649

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதி கட்டட தொழிலாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கனை பெற்றுக்கொண்ட கட்டட தொழிலாளிகள், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பேருதவியாக உள்ளதாக தெரிவித்தனர்.

 

Comment

Successfully posted