ராணிப்பேட்டையில் உள்ளாட்சி வார்டு வரையறை தொடர்பாக மக்களிடன் கருத்துக் கேட்பு

Feb 26, 2020 01:23 PM 634

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகளை வரையறை செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில்  உச்சநீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு வரையறை நடைபெற்று வருகிறது. வார்டு வரையறை செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நெமிலி, அனவர்திகான் பேட்டை, சோளிங்கர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு பின்னர் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted