திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி துணை முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

May 02, 2019 03:23 PM 262

மதுரை காரியாலத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

சிலைமான் பகுதியில் காலை தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கிய துணை முதல்வருக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து துணை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வேட்பு மனுவை வாபஸ் பெற்ற, தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் செந்தில், அதிமுகவில் இணைந்தார்.

Comment

Successfully posted