பணப் பட்டுவாடாவை தடுக்க அதிமுக, பாஜக கட்சிகள் வலியுறுத்தல்

Apr 03, 2019 01:44 PM 198

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக, பாஜக கட்சிகள் வலியுறுத்தின. பணப் பட்டுவாடா செய்யும் கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Comment

Successfully posted