கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது

Sep 21, 2019 07:38 PM 118

சென்னை துறைமுகத்தில் நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

வாடகை தொகை உயர்வு, அதிக பாரம் ஏற்ற கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தண்டையார்பேட்டை வட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. வாடகை தொகையை ஆயிரம் ரூபாய் உயர்த்தி தர சரக்கு பெட்டகங்களை கையாளும் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன. கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன

Comment

Successfully posted