மீ டூ போராளி - நடிகை நந்திதா தாசுக்கு வந்த சோதனை

Oct 17, 2018 09:00 PM 654

பிரபல நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸ் ஒரு மனித உரிமை போராளியும் கூட. அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்பறவை உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான இந்தி படங்களில் நடித்தவர்.

இவர் மீ டூ இயக்கத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்றப் போவதில்லை என துணிச்சலாக அறிவித்தார்.

இந்நிலையில் நந்திதா தாஸின் தந்தை மீதே ஒரு பெண் பாலியல் புகார் எழுப்பியுள்ளார். தனக்கு 14 வயது இருக்கும் போது, நந்திதாவின் தந்தை ஜதின் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நந்திதா தாஸ், தனது தந்தை மீதான புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு தன்னை மிகவும் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரம் உண்மையாகவே பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மீ டூ இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Comment

Successfully posted