திரிணாமுல், பாஜக இடையே தொடரும் மோதல்

Jan 13, 2020 09:12 PM 801

மேற்குவங்க மாநிலத்தின் அசோன்சோல் பகுதியில் பாஜக அலுவலகத்தை மர்ம நபர்கள் தீ  வைத்து எரித்தனர்

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பாஜக அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றி தங்கள் கொடியினை ஏற்றினர். இந்நிலையில் தற்போது பாஜக அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே இந்த செயலில் ஈடுபட்டதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்

Comment

Successfully posted