சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடரும் உயிரிழப்புகள்

Feb 17, 2020 07:03 AM 233

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை, ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் வேகமாகப் பரவிவரும் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நோய் பரவுவதை ஓரளவுக்கு சீன சுகாதாரத்துறை கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை, சுமார் 70 ஆயிரத்து 400 பேர் கொரோனா வைரஸால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸுக்கு 100 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது.

Comment

Successfully posted