தொடர் மழை காரணமாக பட்டாசு கடைகளில் பட்டாசுகளை வாங்க கூட்டம் குறைந்தது

Oct 20, 2019 06:18 PM 190

தொடர் மழை பெய்து வருவதால் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகளை வாங்க தீவுக்கடலில் பொதுமக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

சென்னை தீவுத்திடலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 65 பட்டாசுகடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தினர் இந்த ஆண்டிற்கான பட்டாசு விற்பனைக்கான டெண்டரை எடுத்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பட்டாசு விற்பனைகள் துவங்கியுள்ள நிலையில், நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால், பட்டாசு வாங்குவதற்காக பொதுமக்கள் வருகை குறைந்து காணப்படுவதாகவும், இதனால் பெரிதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted