புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள்

Apr 22, 2021 10:20 PM 730

 

கொரோனா இரண்டாம் அலை காரணமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுகின்றனர். இந்த நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி பணியாற்றிட உகந்த சூழ்நிலையை உருவாக்கவும், சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்லாமல் தடுக்கவும், உரிய நிவாரண உதவி பெறுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மைய எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுப்பாட்டு அறைகளை 044 - 24321438 மற்றும் 044 - 24321408 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொண்டு, குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் கட்டுப்பாட்டு அறைகளுக்கான தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related items

Comment

Successfully posted